எங்களைப் பற்றி

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் கிரமப்புற உதவி மையங்கள் (AgriBPOs) மூலம் பெண்களுக்கு சுய தொழில் வளர்ச்சியை தகவல் மற்றும் தொழில்நுட்பத்தைப்(Information and Communication Technology) பயன்படுத்தி ஊக்குவித்தல்நோக்கம்

வலை தொழில்நுட்பங்களின் துணை கொண்டு வானிலை, சந்தை நிலவரம், விலை நிலவரம், மண் ஊட்டச்சத்து மேலாண்மை ஆகியவற்றை சுலபமாக அறிந்து விவசாயிகளுக்கு உலகளாவிய விவசாய நடைமுறைகளை தெரிவிப்பது மட்டுமில்லாமல் உற்பத்தி நுண்ணறிவு மற்றும் அறுவடை முன்னறிவிப்புகளை தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தெரிவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்


திட்டம்

விவசாய தொழிலின் உற்பத்தித்திறனை பாதிக்கும் சிக்கல்களை எதிர்கொள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் இன்றியமையாததாகிறது. எனவே தொழில்நுட்பத்துடன் கூடிய விவசாய நுண்ணறிவு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு விவசாய வணிக செயல்முறை வெளியீடு (AGRIBPO) செயல்படுகிறது. இந்த திட்டமானது விவசாய தொழிலில் உள்ள இடர்பாடுகளை களையும் முயற்சியாகவும், பெண் விவசாயிகளை ஒரு தொழில் முனைவோராக மாற்றும் முயற்சியாகவும் இருக்கிறது. இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள்களானது:

  • வேளாண் விரிவாக்க சேவைகளை வழங்க கிராமப்புற விவசாய ஆதரவு மையங்களை (அக்ரி பிபிஓ) நிறுவுதல்
  • விவசாயிகளின் சந்தேகங்களை தீர்க்கும் விதமாக விவசாய நிபுணர்களுடன் கூடிய நிகழ்நேர கலந்துரையாடலை ஏற்படுத்திக் கொடுத்தல்.
  • இந்த திட்டத்தை அண்ட்ராய்டு பயன்பாட்டுடன் உருவாக்குதல் - FarmApp
  • வலைதளத்தை உருவாக்கி அதில் விவசாய மேம்பாட்டுக்கான அரசு திட்டங்கள் ,பயிர் பற்றிய விவரங்கள், சந்தை அறிவியல் மற்றும் வானிலை நிலவரங்களை வழங்குதல்


சேவைகள்

வலை தொழில்நுட்பங்களின் துணை கொண்டு வானிலை, சந்தை நிலவரம், விலை நிலவரம், மண் ஊட்டச்சத்து மேலாண்மை ஆகியவற்றை சுலபமாக அறிந்து விவசாயிகளுக்கு உலகளாவிய விவசாய நடைமுறைகளை தெரிவிப்பது மட்டுமில்லாமல் உற்பத்தி நுண்ணறிவு மற்றும் அறுவடை முன்னறிவிப்புகளை தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தெரிவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்

மகளிர் சுய உதவிக்குழுக்கள் (SHG) மற்றும் கிளை மையங்களுக்கு (KIOSK) கீழ்க்கண்ட பயிற்சி மற்றும் பராமரிப்பு சேவைகள் வழங்கப்பட உள்ளன.

  • ஒரு விவசாய நிபுணரிடம் விவசாயினை இணைத்து, நேரத்தை நேரடியாக பதில்களைப் பெற காணொளி கலந்துரையாடலை ஏற்படுத்திக் கொடுத்தல்.
  • துல்லிய வானிலை அளவீடு மற்றும் ஒவ்வொரு கிராமத்தின் வெப்பநிலை, ஈரப்பதம், அழுத்தம், காற்று வேகம், காற்றின் திசை மற்றும் மழை தகவல்களைக் கொடுத்தல்.
  • சந்தை நிலவர இடர்பாடு: பண்டமாற்று பரிமாற்றம், விலை விருப்பங்கள் போன்றவற்றின் தகவல்களைக் கொடுத்தல்.
  • வேளாண்மை செயலாக்கங்கள், விவசாய ஆலோசனை சேவைகள், வேளாண் சப்ளை செயின் மேலாண்மை பற்றிய தகவல்களைக் கொடுத்தல்
  • SHG க்களுக்கு தேவையான சந்தை, வங்கி, விரிவாக்க பங்குதாரர் மற்றும் சப்ளையர் பற்றிய தகவல்களுடன் இணைத்தல்.


அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை(DST)

அடிப்படை ஆராய்ச்சியில் இந்தியா வளர்ந்து வரும் நாடுகளின் தரவரிசையில் முக்கியமான இடத்தில் உள்ளது.வளர்ந்துவரும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப சூழ்நிலையில் இந்திய அறிவியல் துறை அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கிறது.சமீபத்திய வளர்ச்சியின் காரணமாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைக்கு கோரிக்கைகள் மிகுந்த காரணத்தாலும் அறிவியல் துறை சார்ந்த மற்றும் தேசிய அளவிலான தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்களை மேற்கொள்ள வேண்டியதாகிறது

சோனா தொழில்நுட்பக் கல்லூரி

சோனா தொழில்நுட்பக் கல்லூரி அண்மையில் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் திட்டங்கலை வெற்றிகரமாக நிறைவேற்றியதன் மூலம் உலகளாவிய அடையாளத்தை அடைந்துள்ளது.இந்தியாவில் தலை சிறந்த தொழில்துறை - இணைந்த நிறுவனத்திற்கான AICTE - CII விறுது மற்றும் NAAC மூலம் பாராட்டப்பட்ட 'A' த்ர சான்றிதழை இந்நிறுவனம் பெற்றுள்ளது.தரமான கல்வி வழங்குவதில் இக்கல்லூரி சிறந்து விளங்குகிறது. மனித வள மேம்பாட்டு அமைச்சக திட்டத்தின் கீழ் (MHRD) சோனா தொழில்நுட்பக் கல்லுரி "தொழில் முனைவோர் விருதை" பெற்றுள்ளது. அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி துறை (DSIR) புது தில்லி மூலம் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பு (SIRO) என சோனா கல்லூரி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


விவசாய நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிகள்
அரசு சாரா நிறுவனங்கள்
விவசாய தொழில்நுட்ப நிறுவனங்கள்


எங்கள் குழு

Dr.J. அகிலாண்டேஸ்வரி
முதன்மை ஆய்வாளர்
Dr.R.S. சபீனியன்
துணை முதன்மை ஆய்வாளர்-I
Mr.M. மாரிமுத்து
துணை முதன்மை ஆய்வாளர்-II
Dr.S. லக்ஷ்மி
திட்ட ஒருங்கிணைப்பாளர்
Ms.B. கெளசல்யா
திட்ட உதவியாளர்
Mr.J.செல்வநிஷாந்த்
துறையில் உதவியாளர்